எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 April 2021 6:05 PM IST (Updated: 20 April 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எட்டயபுரம்:
எட்டயபுரத்தில், உரங்களின் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் நல்லையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
விவசாயத்திற்கான உரங்களின் விலை உயர்வை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்பபெற வலியுறுத்தியும், புயல் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கும், அறிவித்த நிவாரணத்தை தாமதமின்றி வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாடம் நடத்தப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் சேது, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் ரவீந்திரன், விவசாய சங்க தாலுகா குழு உறுப்பினர் குருசாமி, வண்டி மலையான் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
1 More update

Next Story