ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 20 April 2021 12:57 PM GMT (Updated: 2021-04-20T18:27:19+05:30)

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதே போல் அவினாசி அருகே ஒரு கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதே போல் அவினாசி அருகே ஒரு கிராமத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு 
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில் திருப்பூர் வெடத்தலாங்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள், 2 பெண் குழந்தைகள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியேறவும், புதியதாக உள்ளே ஆட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவினாசி
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி குட்டட்ட பகுதியில்அவினாசிலிங்கம்பாளையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி. காலனி பகுதியில் சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர் சக்திவேல் தலைமையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரானா தொற்று உள்ளது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் அவினாசிலிங்கம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி, தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பிளிச்சிங் பவுடர் தூவி, கிருமிநாசினி தெளித்தனர். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணைந்து வெளியே வர வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகால்களை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
----
திருப்பூர் வெடத்தலாங்காடு  பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story