டாக்டருக்கு கொரோனா


டாக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 April 2021 1:15 PM GMT (Updated: 2021-04-20T18:45:01+05:30)

குமரலிங்கம் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலைய டாக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஆஸ்பத்திரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

போடிப்பட்டி
குமரலிங்கம் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலைய டாக்டருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஆஸ்பத்திரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
குமரலிங்கத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் தினசரி புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கு உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதியும் உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டிருந்தது. இங்கு பணிபுரிந்த டாக்டர் உட்பட3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரி மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
குமரலிங்கம் அரசு ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஒரு டாக்டர் மற்றும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி
இதுதவிர அனைத்து பணியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டதில் வேறு யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.இருந்தாலும் பாதுகாப்பு கருதி சளி, இருமல் போன்ற லேசான அறிகுறிகள் தென்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.நோயாளிகளின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் கொழுமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் கூடுதலாக பணியாற்றி வருகிறார்கள்.மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒருசில நாட்களில் குமரலிங்கம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

Next Story