ஆறுமுகநேரியில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கல்


ஆறுமுகநேரியில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
x
தினத்தந்தி 20 April 2021 1:28 PM GMT (Updated: 2021-04-20T18:58:22+05:30)

ஆறுமுகநேரி போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் 34 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மற்ற யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் போலீஸ் நிலையத்தில்,  ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ டாக்டர் முருகபொற்செல்வி., சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ் நாராயணன் உள்ளிட்ட அனைத்து போலீசாருக்கும் கபசுர குடிநீர் வழங்கினர். மேலும் போலீஸ் நிலைய பகுதியில் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Next Story