குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2021 1:56 PM GMT (Updated: 2021-04-20T19:26:09+05:30)

குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூர்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள பிராந்தியன் கொல்லை 3-வது தெருவில் உதயகுமார் என்கிற கோபி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செல்போன் டவர் அமைத்தால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பாதிப்படையும் நிலை உள்ளது என கூறி செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து அங்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டிட பணியாளர்களை போலீசார் திரும்பிஅனுப்பி பணியை நிறுத்தியதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story