வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது


வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 April 2021 4:24 PM GMT (Updated: 2021-04-20T21:54:58+05:30)

வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஏப்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 28). வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் செல்வக்குமாரின் மனைவி வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து மாடியில் வசித்து வரும் மணிகண்டன் என்ற வாலிபர் ஓடிச் சென்றுள்ளார். 
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மணிகண்டன் கிருஷ்ணன்கோவில் ேபாலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வீடு புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்த போலீசார் நகையை மீட்டனர்.

Next Story