கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காயில் புதிய வகை புழுக்கள் விவசாயிகள் கவலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காயில் புதிய வகை புழுக்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 April 2021 4:42 PM GMT (Updated: 2021-04-20T22:12:50+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்களில் புதிய வகை புழுக்கள் உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்களில் புதிய வகை புழுக்கள் உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதிய வகை புழுக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக உள்ளது. இதனிடையே காவேரிப்பட்டணம், என்.தட்டக்கல், ஜெகதேவி, ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மாங்காயில் புதிய வகை புழுக்கள் தோன்றியுள்ளது. இந்த புதிய வகை புழுக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் உருவாகியுள்ளது. 
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து தோட்டக்கலை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெங்களூரு தேசிய வேளாண் பூச்சியியல் மூலாதார ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி மோகன்,  எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உமாராணி, ராம்பிரசாத் ஆகியோர் என்.தட்டக்கல் கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களில் புழு பாதித்த மாங்காய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விவசாயிகள் கோரிக்கை
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், காவேரிப்பட்டணம் பகுதியில் 428 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள மா வயல்களில் ஒரு புதிய வகை புழுக்கள் உருவாகி உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் மருந்து தெளித்து வருவதால் இவை உருவாகி இருக்கலாம். இதற்கு முதல் உதவியாக 2 மருந்துகளை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த புழுக்கள் புதிய வகையாக உள்ளதால், பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றனர். இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story