சுல்தான்பேட்டை அருகே ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு

சுல்தான்பேட்டை அருகே ஒரே நேரத்தில் 2 கன்றுக்குட்டிகளை பசுமாடு ஈன்றது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே ஒரே நேரத்தில் 2 கன்றுக்குட்டிகளை பசுமாடு ஈன்றது.
விவசாயி
பசுமாடு பொதுவாக ஒரு கன்றுதான் ஈனும். அதிசயமாக 2 அல்லது 3 கன்றுகளை ஈனுவது ஆங்காங்கே நடக்கும். இந்த நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரிபுதூரில் ஒரு பசுமாடு 2 கன்றுகளை ஈன்று உள்ளது.
செஞ்சேரிபுதூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி தெய்வாத்தாள். ராமசாமி தனது தோட்டத்தில் சில மாடுகளை வளர்த்து வருகிறார்.
2 கன்றுகளை ஈன்ற பசு
இந்த நிலையில், அவர் வளர்த்து வரும் பசுமாடு ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது. அந்த 2 கன்றுகளும் நலமாக உள்ளன.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று அந்த கன்றுகளையும், பசுமாட்டையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இளைஞர்கள் சிலர் அந்த கன்றுகளுடன் நின்று செல்பியும் எடுத்துக்கொண்டனர். அத்துடன் அதை தங்களுடைய உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, பொதுவாக பசுமாடு ஒரு கன்றுதான் ஈனும். அதைதான் நாங்கள் பார்த்து உள்ளோம். இப்போதுதான் 2 கன்றுகளை ஈன்றதை பார்த்து இருக்கிறோம். இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.
Related Tags :
Next Story