தர்மபுரி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்போது சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 179 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
826 ஆக அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 744 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 97 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதற்கிடையே புதிதாக 179 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story