ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து


ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து
x
தினத்தந்தி 20 April 2021 5:11 PM GMT (Updated: 2021-04-20T22:41:15+05:30)

ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் சுவாமி புறப்பாடு எளிமையாக நடந்தது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மார்ச் 19-ந் தேதி பூச்சொரிதலுடன் தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேர் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. 

தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

 அதன்படி ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அல்லது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்று இருந்தால கோவில் திருவிழாக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று மாரியம்மன் கோவிலில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மதியம் 1.55 மணிக்கு கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது.

 சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 23-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.


Next Story