குன்னூரில் ரெயில் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு


குன்னூரில் ரெயில் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 20 April 2021 5:13 PM GMT (Updated: 2021-04-20T22:43:04+05:30)

குன்னூரில் ரெயில் பயணிகளுக்கு போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குன்னூர்

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலை ரெயிலில் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு குன்னூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ரெயில் பெட்டிகளில் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


Next Story