மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில்  முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 April 2021 5:29 PM GMT (Updated: 20 April 2021 5:29 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மூங்கில்துறைப்பட்டு

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காகவெளியே வரும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் இதை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.  இதையடுத்து வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு, மேல்சிறுவள்ளூர், வடபொன்பரப்பி, புதூர், கடுவனூர் உள்ளிட்ட பகுதிகளில் வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை தலைமையில் வருவாய்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முககவசம் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயபிரபாகரன், மணிகண்டன் மற்றும் உதவியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story