நாமக்கல்-சேந்தமங்கலம் இடையே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி


நாமக்கல்-சேந்தமங்கலம் இடையே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 20 April 2021 11:06 PM IST (Updated: 20 April 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சேந்தமங்கலம்,

நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தற்போது இந்த பாதையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். மேலும் அந்த பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சுரங்க பாதையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story