ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி  சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 April 2021 11:06 PM IST (Updated: 20 April 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சின்னசேலம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் போயர் தெருவுக்கு செல்லும் வழியில் தனிநபர் சிலர் ஆக்கிரமித்து கடை கட்டி இருப்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொதுமக்கள் ஏற்கனவே மனு கொடுத்தனர். ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேற்படி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு கொடுப்பதற்காக சின்னசேலம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை என கூறப்படுகிறது. அவரது வருகைக்காக கிராமக்கள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வட்டார வளர்ச்சி அதிகாரி வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையறிந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா அங்கே விரைந்து வந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் சின்னசேலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story