போலீஸ் துப்பறியும் நாய்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்க பரிசு


போலீஸ் துப்பறியும் நாய்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்க பரிசு
x
தினத்தந்தி 20 April 2021 6:52 PM GMT (Updated: 2021-04-21T00:22:32+05:30)

கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய போலீஸ் துப்பறியும் நாய்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்க பரிசை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த அதிகரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன் (41) என்ற விவசாயி கடந்த 16-ந்தேதி இரவு தன்னுடைய தென்னந்தோப்பில் அடையாளம் தெரியாத நபர்களால்கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் துப்பறியும் நாய் லைக்கா சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து குற்றம் சாட்டவர்களின் வீட்டிற்கு செனறு அடையாளம் காட்டியது. இதைதொடர்ந்து இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யபட்டனர்.
இதேபோல் கடந்த 18-ந்தேதி காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் (29) என்பவர ்மீன்கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் காரைக்குடியில் உள்ள சந்தையில் கொலை செய்யபட்டு கிடந்தார். இந்த வழக்கில் போலீஸ் துப்பறியும் நாய் ராம்போ சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சென்று குற்றவாளியை சரியாக அடையாளம் காட்டியது.
இதை தொடர்ந்து இந்த 2 துப்பறியும் நாய்களுக்களின் பயிற்சியாளர்கள் வீரமணி, வீரக்குமார், மணிமாறன், கோபால் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ராஜராஜன் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.Next Story