பாச்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பாச்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 April 2021 12:26 AM IST (Updated: 21 April 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பாச்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள விஜயரெகுநாத பட்டியில் உள்ள மின்மாற்றி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆழ்குழாய் கிணற்றை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்திருந்த நிலையில், சில பயிர்கள் மின்சாரம் இல்லாததால் கருகியது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் மின்மாற்றியை மாற்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாச்சிக்கோட்டையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உதவி செயற்பொறியாளார் சுப்பிரமணியன், முற்றுகையிட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மின்மாற்றியை உடனடியாக மாற்றி மின்வினியோகம் செய்வதாக கூறியதைடுத்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
1 More update

Next Story