விபத்தில் மாணவன் சாவு


விபத்தில் மாணவன் சாவு
x
தினத்தந்தி 22 April 2021 11:01 PM IST (Updated: 22 April 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர் இறந்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகன் கோபி (வயது 17). அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் சதீஷ் (17). பிளஸ்-2 மாணவன். இவர்கள் இருவரும் உள்ளூரில் நடந்த திருமண விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கோபி பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். காயம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சதீஷ் இறந்தார். கோபி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story