ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்


ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 23 April 2021 8:11 AM IST (Updated: 23 April 2021 8:11 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சியில் இருந்த போது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

தாம்பரம், 

செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் பஸ் நிலையத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று ஆய்வு செய்ததில், மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.

ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதற்குள் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயந்துபோன மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story