ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 April 2021 1:54 AM IST (Updated: 24 April 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

திருச்சி, 
திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் 3-வது குறுக்கு தெரு தாஸ் தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிராட்ரிக் இனிகோ (வயது 41) சோலகம்பட்டி ரெயில் நிலையத்தில் டிராக் மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த லூயிஸ் பிராட்ரிக் இனிகோ, கோட்டை ெரயில்வே கேட் அருகில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதேபோல் திருச்சி திருவெறும்பூர் ராமலிங்கம் காலனியைச் சேர்ந்த சலவை தொழிலாளி வடிவேலு (34) குடும்பத்தகராறு காரணமாக நேற்று அதிகாலை திருப்பதி செல்லும் விரைவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவம் குறித்தும் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story