புதுச்சேரியில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது


புதுச்சேரியில் 55  மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 24 April 2021 7:49 AM IST (Updated: 24 April 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுப்பதற்காக புதுச்சேரியில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

புதுவை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களும் அமல்படுத்த துவங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை  முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.

அதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு  கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று இரவு 10 மணிக்கு புதுச்சேரியில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. திங்கள்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து 55 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால் அதில் சில தளர்வுகளும் உள்ளன.

அதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமென்றும், பயணிகள் என்றால் டிக்கெட் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story