சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி உருவப்படத்துக்கு கமிஷனர் அஞ்சலி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சென்னை,
சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு ஏட்டாக வேலை செய்தவர் கருணாநிதி (வயது 48). இவர், கடந்த 14-ந் தேதி வயிற்றுவலி காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு ஏற்கனவே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியாகி உள்ளார். ஏட்டு கருணாநிதி 2-வதாக இறந்துள்ளார். அவர் குடும்பத்துடன் சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் போலீஸ் குடியிருப்பில் வசித்தார். அவருடைய மனைவி பெயர் சுந்தரவள்ளி (42). இவர்களின் ஒரே மகன் சாய்கிஷோர். அவர் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
கொரோனா பாதிப்பால் பலியான ஏட்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று மாலை மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story