‘டிக்-டாக்’ மூலம் பழகி பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


‘டிக்-டாக்’ மூலம் பழகி பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 10:32 AM IST (Updated: 24 April 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறு , ‘டிக்-டாக்’ மூலம் பழகி பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிஜிட்டல் டிசைனராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு, ‘டிக்-டாக்’ செயலி மூலம் எர்ணாவூரைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

மகளின் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், மாணவியை கண்டித்தனர். இதற்கிடையில் கடந்த 16-ந்தேதி தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் எண்ணூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மாணவி, அடையாறில் விக்னேஷ் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தது. மாணவியை மீட்ட மகளிர் போலீசார், பிளஸ்-2 மாணவியை ஏமாற்்றி பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தனர்.

Next Story