திருவள்ளூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் சாவு
திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
7 வயது சிறுவன்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமம் மேட்டு கண்டிகை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 36). இவருக்கு திருமணமாகி நிஷாந்தினி என்ற மனைவியும் அவினாஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் அவினாஷ் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீட்டின் குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று அங்கிருந்த வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயன்றதாக தெரிகிறது.
பலி
அப்போது எந்திரத்தில் இருந்த மின் கசிவு காரணமாக சிறுவனை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான். இதுகுறித்து தகவலறிந்த கடம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story