தானே கழிமுகத்திற்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் சுனில் மானேயிடம் என்.ஐ.ஏ. விசாரணை
தானே கழிமுகப்பகுதிக்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் சுனில் மானேயிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி உள்ளது.
மும்பை,
மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. மேலும் அந்த காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக்கும் மார்ச் 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் என்.ஐ.ஏ. மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை கடந்த மாதம் கைது செய்து இருந்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு உதவி இன்ஸ்பெக்டரும், முன்னாள் போலீஸ்காரர் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் மானேயை கைது செய்தனர். அவர் ஹிரேன் மன்சுக் கொலைக்கு சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை மும்பை அந்தேரி மற்றும் ஹிரேன் மன்சுக் உடல் மீட்கப்பட்ட தானே கழிமுகப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story