அரவைக்காக 2,000 டன் நெல்


அரவைக்காக 2,000 டன் நெல்
x
தினத்தந்தி 27 April 2021 9:14 PM IST (Updated: 27 April 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
கொள்முதல் நிலையங்கள்
நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு மையத்தில் சேமிக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 
மேலும் அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது. 
2,000 டன் நெல்
அதன்படி நாகையில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2,000 டன் சன்னரக  நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளின் மூலம் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். தொடர்ந்து ் நெல் மூட்டைகளுடன் சரக்கு ெரயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. 
கீழே கொட்டிய நெல் மணிகள்
முன்னதாக லாரிகளில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் முட்டைகளில் பெரும்பாலானவற்றின் சாக்குகள் சேதம் அடைந்திருந்தன. இதனால் லாரிகளில் இருந்து சரக்கு ெரயில் வேகன்களில் நெல் மூட்டைகளை ஏற்றும் பொழுது, சாக்குகளில் இருந்த ஓட்டை வழியாக நெல் மணிகள் கீழே கொட்டின. இவை அனைத்தும் லாரியிலும், தரையிலும் சிதறிக் கிடந்தன. 
இதனை அங்கிருந்த தொழிலாளர்கள் கூட்டி ஒன்றாக சேர்த்து, சாக்குகளில் மீண்டும் மூட்டைகளாக கட்டி ெரயில் வேகன்களில் ஏற்றினர். 
சாக்கு மூட்டைகள் சேதம்
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கூறியதாவது:-
குறுவை சாகுபடியின் போது சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் நீண்ட நாட்களாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் சாக்கு மூட்டைகள் சேதமடைந்தன. கீழே கொட்டிய நெல்மணிகள் சேதம் ஆகாதபடி மாற்று சாக்குகளில் கட்டி சரக்கு ரெயிலில் வைக்கப்பட்டது என்றார்.

Next Story