மாவட்ட செய்திகள்

ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ளலாம் ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு + "||" + Isha Vidya Schools Can Be Used As Corona Therapy Centers Zaki Vasudev Announcement

ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ளலாம் ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு

ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்தி கொள்ளலாம் ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு
தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக தமிழக அரசுக்கு அளிப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம்.

இந்த சவாலில் இருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங் களாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள முடியும்.

நலத்திட்ட உதவிகள்

கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ஜக்கி வாசுதேவ் தனது பங்களிப்பாக ரூ.11.54 கோடியை வழங்கினார். இந்த நிதியானது, அவரது ஓவியங்களை ஆன்-லைனில் விற்பனை செய்ததின் மூலமாக திரட்டப்பட்டது.

மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டனர். மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முக கவசம், சானிடைசர் உதவிகளும் வழங்கப்பட்டன. கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் இப்போதும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மேற்கண்ட தகவல் ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசிக்கு பரிசு அறிவிப்பு; சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்
கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அடுத்து சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.
2. இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும்; பி.சி.சி.ஐ. அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.
3. விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு
கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4. வரும் 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.