தடுப்பூசி போடும் திட்டத்தில் மாநில அரசுக்கு குழப்பம் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்


தடுப்பூசி போடும் திட்டத்தில் மாநில அரசுக்கு குழப்பம் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
x
தினத்தந்தி 28 April 2021 7:43 PM IST (Updated: 28 April 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போடும் திட்டத்தில் மராட்டிய அரசு குழப்பத்தில் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி நவாப் மாலிக், “மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்காது என்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் மாநில அரசு இந்த சுமையை ஏற்கும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்” என்றார்.

இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் சில மாநிலங்கள் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த விரும்பினால், நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

மராட்டியத்தில் 4.35 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மற்றும் 1,750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. இது வேறு எந்த மாநிலமும் பெறும் அளவை விட 2 மடங்கு அதிகமாகும்.

மராட்டியத்திற்கு 1,100-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மத்திய அரசை குறை கூறியே பழக்கப்பட்டவர்கள் தொற்று நோய்களின்போது குறைந்தபட்ச விவேகத்துடன் நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story