சூலூர் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
சூலூர் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு போனது.
கருமத்தம்பட்டி
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் நேரு நகரில் வசித்து வருபவர் நிக்கில் போஸ். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருவனந்தபுரம் சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகையை மர்ம ஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story