பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2021 11:29 PM IST (Updated: 28 April 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் குடிநீர் குழாய் சீரமைக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி நகர் மதுரை சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. 

அப்போது அந்த வழியாக சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 

அதை சீரமைக்காமல் விட்டதால் குடிநீரில் சாக்கடை கலக்கும் நிலைமை ஏற்பட்டது. 

இதையடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் மதுரை சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

நகராட்சி அலுவலர்களும் அங்கு வந்தனர். 

உடைப்பு ஏற்பட்ட குழாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். 

இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Next Story