திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ‘வைபை’ கருவியை கொண்டு செல்ல தி.மு.க. எதிர்ப்பு; அதிகாரிகள் திருப்பி கொண்டு சென்றனர்


திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ‘வைபை’ கருவியை கொண்டு செல்ல தி.மு.க. எதிர்ப்பு; அதிகாரிகள் திருப்பி கொண்டு சென்றனர்
x
தினத்தந்தி 29 April 2021 5:44 AM GMT (Updated: 29 April 2021 5:44 AM GMT)

பெருமாள்பட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் ‘வைபை’ கருவியை கொண்டு செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அதை திருப்பி கொண்டு சென்றனர்.

வாக்கு எண்ணும் மையம்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்று முடிந்தது. வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையான திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் எதிர்ப்பு

இந்த நிலையில் நேற்று வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உடன் ‘வைபை’ கருவியை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். இதைக்கண்ட அங்கிருந்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ‘வைபை’ கருவியை கொண்டு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீரென அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் மீண்டும் அந்த ‘வைபை’ கருவியை திருப்பிக்கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 


Next Story