இன்பெக்டர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் போலீஸ் கமிஷனா் பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு


இன்பெக்டர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் போலீஸ் கமிஷனா் பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 April 2021 5:15 AM IST (Updated: 30 April 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் போில் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் புகார்

அகோலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பீம்ராவ் கட்கே. இவர் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார். அந்த நேரத்தில் உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது சமீபத்தில் ரூ.100 கோடி ஊழல் புகார் கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனா் பரம்பிர் சிங் தானேயில் பணியாற்றி உள்ளார்.இதில் பரம்பீர் சிங் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது பீம்ராவ் கட்கே அகோலா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

வழக்குப்பதிவு

அந்த புகாரில், பரம்பீர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும் மிகப்பெரிய அளவிலான மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என பரம்பீர் சிங் கட்டாயப்படுத்தியதாகவும், இதேபோல வழக்குப்பதிவு செய்த சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என அவர் மிரட்டியதாகவும் பீம்ராவ் கட்கே புகாரில் கூறியிருந்தார்.

இன்ஸ்பெக்டரின் புகார் குறித்து அகோலா போலீசார் பரம்பீர் சிங், உதவி போலீஸ் கமிஷனர் பரக் மனிரே மற்றும் 26 போலீசார் மீது வன்கொடுமை, தடயங்களை அழித்தல், சதித்திட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story