காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்து நேரங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் போன்றவை ஏற்படும் போது உடனடியாக சென்று உதவிகள் செய்யவும், ரோந்துப்பணியை சிறப்பாக செய்யவும் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்துக்கென 5 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த 5 பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிதாக அரசால் வழங்கப்பட்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பிருந்து 5 வாகனங்களையும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 3 வாகனங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 2 வாகனங்கள் உள்பட மொத்தம் 5 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story