இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது


இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 6:49 PM GMT (Updated: 30 April 2021 6:49 PM GMT)

லாரி டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் வீரமணிகண்டன் (வயது26). லாரி டிரைவர். இவர் லாரியில் சரக்கு ஏற்றி செல்லும்போது அதேபகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் பிரவின்குமார் (27) என்பவரை உடன் அழைத்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் கரிமூட்டை ஏற்றி கொண்டு அம்மன்கோவில் அருகில் சென்றபோது வீரமணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் உடன் வந்தபிரவீன் குமாரை வண்டியை ஓட்டுமாறு கூறினாராம். தான் கேட்கும்போது வண்டியை ஓட்ட கொடுக்காததால் அப்போது ஓட்ட மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் டிரைவர் இருக்கையின் பின்னால் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வீரமணிகண்டனை சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வீரமணிகண்டன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தலையில் 32 தையல் போட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரமணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின்குமாரை கைது செய்தனர். இவர்மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story