இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்


இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 30 April 2021 7:23 PM GMT (Updated: 30 April 2021 7:23 PM GMT)

இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.


திருச்சி, 
கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடைவிதித்துள்ளது. இதனால் நேற்றே மக்கள் இறைச்சி மற்றும் மீன்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். இதன்காரணமாக திருச்சி உறையூர் காசி விளங்கி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல திருச்சி நகரில் பல இடங்களில் உள்ள ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை இறைச்சி கடைகளில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.

Next Story