மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 1:02 AM IST (Updated: 1 May 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வேன் நிறுத்தம் அருகில் மணிகண்டன் (வயது 36) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தனியார் ஆஸ்பத்திரி அருகில் சுக்கிரவார்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் (26) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருத்தங்கல் பகுதியில் தொடர்ந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே திருத்தங்கல் போலீஸ் நிலைய அதிகாரிகள் சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story