வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றதொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை விருதுநகர் - சிவகாசி சாலையில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற உள்ளது. இங்கு தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் அறையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ள்ளதை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் முன்னிலையில் கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார்.
மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story