முக கவசம் அணியாத பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதால் பரபரப்பு


முக கவசம் அணியாத பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 April 2021 8:00 PM GMT (Updated: 30 April 2021 8:00 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் முக கவசம் அணியாத பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
கொரோனா பரவுவதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் பிரமநாயகம், பழனி குரு ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறையினர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் முக கவசம் அணியாமல் இருந்த 15 பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். மேலும் அருகிலுள்ள கடைகளுக்கு சென்று முககவசம் வாங்கி வருமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story