சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள்


சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள்
x
தினத்தந்தி 30 April 2021 9:16 PM GMT (Updated: 30 April 2021 9:16 PM GMT)

சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19,100 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. தினமும் 3,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று வரை மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 693 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு மேலும் 19 ஆயிரத்து 100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரத்து 100 டோஸ்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story