திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு; டிரைவர் கைது


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 11:30 AM IST (Updated: 1 May 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் மணிபிரசாத் (வயது 55). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்றுமுன்தினம் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு வந்து கொண்டிருந்தார்.திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 42) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story