பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது


பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 1 May 2021 12:00 PM IST (Updated: 1 May 2021 12:00 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பொன்னேரி அருகே உள்ள அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகன் சரத்(வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர், அதே பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 மாணவியான 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த டிசம்பர் மாதம் கடத்தி சென்றார்.பின்னர் பெரியபாளையம் அருகே கோவில் ஒன்றில் தாலி கட்டிய நிலையில் செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து 3 மாதம் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது பள்ளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, திடீரென மாயமான அவரை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவியின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் தனது மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரத் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகிதாஅண்ணாகிருஷ்டி, சரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 


Next Story