மே தினம் கொண்டாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலைய பணிமனையில் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. சி.ஐ.டி.யு. மத்திய சங்க பொருளாளர் குமரகுருபரன் தலைமை தாங்கி, கொடியேற்றினார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளரும், மாவட்ட விவசாய சங்க துணை செயலாளருமான நம்பிராஜன் கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் பணிமனை செயலாளர் சங்கிலிபூதத்தான், நிர்வாகிகள் ஜீவானந்தம், சுப்பிரமணியன், கணேசன், ஆறுமுகம், முருகன், முத்துசாமி, உலகநாதன், பீட்டர் நல்லதம்பி மற்றும் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story