விபத்தை தடுக்க ஒளிரும் விளக்குகள்


விபத்தை தடுக்க ஒளிரும் விளக்குகள்
x
தினத்தந்தி 1 May 2021 8:28 PM IST (Updated: 1 May 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

விபத்தை தடுக்க ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாடிப்பட்டி,
வாடிப்பட்டி தேசியநெடுஞ்சாலையில் பாண்டியராஜபுரம் தொடங்கி நகரி வரை வாடிப்பட்டி போலீஸ் சரக எல்லையாக உள்ளது. இந்த நாற்கரசாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. அதிலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களான பாண்டியராஜபுரம், சாணாம்பட்டி  விலக்கு, பழனியாண்டவர் கோவில் பிரிவு, விராலிப் பட்டிபிரிவு, மின்வாரிய அலுவலகம் எதிரில் நகர் புறசாலை பிரிவு, ஆண்டிபட்டி-சோழவந்தான்பிரிவு, கட்டக்குளம் பிரிவு, தனிச்சியம் அலங்காநல்லூர் பிரிவு, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் கட்டுபாடு இல்லாத வேகத்தில் செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துகள் நடந்து உயிர்பலி அடிக்கடி நடக்கிறது. இந்தநிலையில் இந்த சாலையில்  விபத்துபகுதி ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் விளக்குகள் விராலிப்பட்டி பிரிவு, தனிச்சியம் பிரிவு, அய்யங்கோட்டை ஆகிய இடங்களில் நான்குவழிச்சாலையில் இருபுறமும் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது.

Next Story