புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று


புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 May 2021 5:56 PM GMT (Updated: 1 May 2021 5:56 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, மே.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
164 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவில் தினமும் பதிவான சராசரி எண்ணிக்கையை விட தற்போது அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து882 ஆக அதிகரித்துள்ளது.
 டிஸ்சார்ஜ்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.
அரிமளம்
இதில் அரிமளம் ஒன்றியத்தில் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 24 வயது ஆண், ஏம்பல் அருகே உள்ள வயலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண், மதகம் கிராமத்தை சேர்ந்த 39 வயது ஆண், மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 31 வயது ஆண், தல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது பெண் குழந்தை, 9 வயது ஆண் குழந்தை, ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த 24 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story