போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு என்னும் மையங்களுக்குச் செல்லும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா
இதன் அடிப்படையில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாத நிலையில் அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கொரோனா தடுப்பூசி 2 முறை செலுத்தி கொண்டுள்ளார். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பு அவருக்கு ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story