வத்திராயிருப்பு பகுதியில் கன மழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கனமழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மாலை 4.15 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக 6 மணி வரை பெய்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
நேற்று பெய்த கன மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் 1 மணி ேநரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
விவசாய பணி
இந்த மழையால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் அக்ரஹாரம் வடக்குத்தெருவில் மழைநீர் செல்ல வாறுகால் வசதி சரிவர இல்லாததால் குளம்போல் தேங்கி நின்றது.
எனவே தாழ்வாக உள்ள கழிவுநீர் கால்வாய்களை உயர்த்தி கழிவுநீர் சீராக செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மழை விவசாய பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story