கலந்தாய்வு கூட்டம்


கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 1 May 2021 7:02 PM GMT (Updated: 1 May 2021 7:02 PM GMT)

காரியாபட்டி போலீஸ் நிலையத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காரியாபட்டி, 
காரியாபட்டி போலீஸ் நிலையத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அருப்புக்கோட்டை  துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமை தாங்கினார். காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், காரியாபட்டி சித்த மருத்துவ அலுவலர் பரிமள செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வணிகர்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு கூறிய விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் கூறினார். இதில் காரியாபட்டியில் உள்ள அனைத்து வணிக பெருமக்களும் கலந்து கொண்டனர்.

Next Story