1 மணி ேநரம் பலத்த மழை
சாத்தூர், ராஜபாளையத்தில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சாத்தூர்,
சாத்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக அடித்து வந்தது. இந்தநிலையில் சாத்தூர், வெங்கடாசலபுரம், மேட்டமலை, சின்னகாமன்பட்டி, சிந்தப்பள்ளி, இருக்கன்குடி, அம்மாபட்டி, அமீர்பாளையம், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால், ரெங்கப்ப நாயக்கன்பட்டி, நத்தத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை 1 மணி நேரம் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல ராஜபாளையம் நகர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில், சத்திரப்பட்டி, சங்கரபண்டியபுரம், சம்சிகபுரம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
Related Tags :
Next Story