மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு + "||" + Schoolgirl drowns in lake

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
உடையார்பாளையம் அருகே தோழிகளுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
உடையார்பாளையம்:

மாணவி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த மேலமைக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 32). இவர் கோயம்புத்தூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் பாவனா(13). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த வாரம் சொந்த ஊரான மேலமைக்கால்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது ஏரியில் அவர் தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.
சாவு
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டனர். மேலும் மயங்கிய நிலையில் இருந்த அவரை, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாவனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் திடீரென சாவு
வாலிபர் திடீரென இறந்தார்.
2. கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு
கார் மரத்தில் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
3. மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சின்னதாராபுரம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
4. சாலையில் தடுமாறி விழுந்து பெண் சாவு
காரைக்குடியில் நடந்து சென்ற பெண் சாலையில் தவறி விழுந்து இறந்தார்.
5. ஊருணியில் மூழ்கி சிறுமி பலி
காளையார்கோவில் அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலியானார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை