தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2021 8:37 PM GMT (Updated: 1 May 2021 8:37 PM GMT)

கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அச்சன்புதூர், மே:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் இந்திரா காலனியில் வசித்தவர் சந்தன பிச்சை மகன் மாரிமுத்து (வயது 32). இவர் கடையநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story