தாளவாடி, கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு கொரோனா


தாளவாடி, கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 9:37 PM GMT (Updated: 1 May 2021 9:37 PM GMT)

தாளவாடி, கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டது.

ஈரோடு
தாளவாடி, கொடுமுடி பகுதியில் 23 பேருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள சிக்கள்ளியை சேர்ந்த கிராம உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் தாசில்தார் அலுவலகம் பூட்டபட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதே போல் இக்களூரில் 2 பேருக்கும், தாளவாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், கும்டாபுரத்தில் ஒருவருக்கும், திகனாரையில் 2 பேருக்கும், பாறையூரில் 2 பேருக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 
தாளவாடி மலைகிராமங்களில் கொரோனா வேகமாக பரவிவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடி அருகே உள்ள இஞ்சிப்பாளையத்தைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும், ஒத்தக்கடை கணபதி பாளையத்தை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும், சோளக்காளிபாளையத்தை சேர்ந்த 33 வயது ஆணுக்கும், சாலைப்புதூரைச் சேர்ந்த 27 வயது ஆணுக்கும், எல்லையூரைச் சேர்ந்த 49 வயது பெண்ணுக்கும், வருந்தியாபாளையத்தை சேர்ந்த 27 வயது ஆணுக்கும், கொடுமுடி கறிக்கடை தெருவைச் சேர்ந்த 18 வயது ஆணுக்கும், தட்டாம்பாளையத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும், 45 வயது ஆண் ஒருவருக்கும் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். 
மேலும் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வசித்த பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. 

Next Story